காரட் சாப்பிடுவதால் நம்முடைய உடலில் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் உருவாகிறது என்பது தெரிந்த செய்திதான். ஆனால் காரட்டில் உள்ள எந்த பகுதி புற்றுநோய் கட்டிகளை அழிக்கிறது என்பது இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்திலும், டென்மார்க்கிலும் உள்ள நியூகாஸில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றிய ஆராய்ச்சிகளை எலிகளைக் கொண்டு செய்துவருகிறார்கள். எலிகளில் காணப்படும் புற்றுநோய்க்கட்டிகள் மூன்றில் ஒருபங்காக குறைவது எதனால் என்பதற்கான விடை இப்போது கிடைத்திருக்கிறது.
காரட்களை சேமிக்கும்போது வேர்ப்பகுதிகளில் கறுப்பு நிற புள்ளிகள் தோன்றி அழுகல் தொடங்கி விடுகிறது. இந்த நோய்க்கு liquorice rot என்று பெயர். இந்த நோயை ஒழிக்க Falcarinol எனப்படும் இயற்கையான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பூச்சிக்கொல்லிக்கு புற்றுநோய்க்கட்டிகள் வளர்ச்சியடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் புற்றுநோய்க் கட்டிகளுடன் கூடிய 24 எலிகள் பயன்படுத்தப்பட்டன. இந்த எலிகளை மூன்று குழுக்களாக பிரித்துக் கொண்டனர். முதல் குழுவிற்கு நமக்கு நன்றாகத்
... Read more »
1. முதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப்போதும் வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அவசர தேவைக்கான மருந்துகள் இருத்தல் வேண்டும்.
2. முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.
3. பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யும் பொழுது, முதலுதவி செய்யும் நபரின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளல் அவசியம்.
4. அவசர சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக மூச்சுவிடுவதற்குத் தேவையான சூழ்நிலையினை ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லையெனில் செயற்கை சுவாசத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
5. பாதிக்கப்பட்ட நபரின் உடலில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறும் நிலையிலும், பாதிக்கப்பட்ட நபர் விஷம் உட்கொண்ட நிலையிலும், இதய மற்றும் சுவாச இயக்கங்கள் நிற்பது போன்ற நிலையிலும் மிகவும் வேகமாக செயல்படுதல் அவசியம். ஒவ்வொரு விநாடியும் மிக மிக முக்கியமானதாகும்.
6. பாதிக்கப்பட்டவர்கள் கழுத்திலோ அல்லது பின்புறத்திலோ காயம் இருந்தால் உடனே மருத்துவ வசதி அளிக்க வேண்டும். வாந்தி செய்து ஆபத்துக்
... Read more »
மனிதனின் நினைவாற்றலுக்கும் மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. உண்மையில் மனதை எந்தளவுக்கு ஒரு முகபடுத்துகின்றோமா அந்தளவிற்கு எங்களது ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும்.
அடிப்படை நினைவாற்றல் செயற்பாட்டை மனதின் ஒருநிலைப்பாட்டை மையமாகக் கொண்டு விபரிக்க முடியும். யோகா பயிற்சிகளின் மூலம் நினைவுச் செயற்பாட்டை அதிகரிக்க முடியும். அறிவு பலமாக அமையாது, சரியான அறிவே சக்தியாக கருத முடியும்.
இந்தப் பகுதியில் நினைவாற்றலை அதிகரிப்பதற்கு எவ்வாறான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது பற்றியும், அதற்கான ஏதுக்கள் பற்றியும் விபரிக்கப்பட்டுள்ளது.
மனிதனின் நினைவாற்றலுக்கும் மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. உண்மையில் மனதை எந்தளவுக்கு ஒரு முகபடுத்துகின்றோமா அந்தளவிற்கு எங்களது ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும்.
அடிப்படை நினைவாற்றல் செயற்பாட்டை மனதின் ஒருநிலைப்பாட்டை மையமாகக் கொண்டு விபரிக்க முடியும். யோகா பயிற்சிகளின் மூலம் நினைவுச் செயற்பாட்டை அதிகரிக்க முடியும். அறிவு பலமாக அமையாது,
... Read more »
இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஸப் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனும், தமிழ் புலம்பெயர்வாளர்களுடனும் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.