Thursday, 04.02.2026, 5:53 AM


Home
Sign Up
Log In
TAMILAN.DO.AM Welcome Guest | RSS  
Site menu

Section categories
செய்திகள் [9]
News
தொழிநுட்பம் [10]
Tec
மருத்துவம் [11]
Medical
சினிமா [6]
Cinema
வினோதங்கள் [11]
Dif

Our poll
Rate my site
Total of answers: 8

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

Block title

Home » 2015 » March » 26 » நாட்டையே அழிக்கும் ஆபத்து 37000 கி.மீ. வேகத்தில் நாளை பூமியைக் கடக்கும் இராட்சத விண்கல்
7:03 PM
நாட்டையே அழிக்கும் ஆபத்து 37000 கி.மீ. வேகத்தில் நாளை பூமியைக் கடக்கும் இராட்சத விண்கல்
நாட்டையே அழிக்கும் ஆபத்து 37000 கி.மீ. வேகத்தில் நாளை பூமியைக் கடக்கும் இராட்சத விண்கல்
[ வியாழக்கிழமை, 26 மார்ச் 2015, 11:29.02 AM GMT ]

1000 மீட்டர் அகலம் கொண்ட இராட்சத விண்கல்  ஒன்று  நாளை (27-03-2015) பூமிக்கு மிக அருகில் கடக்க உள்ளதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலைய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இராட்சத விண்கல்லானது மணிக்கு 37000 கி.மீ. வேகத்தில் பூமியைக் கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

'2014 ஒய்.பி.35' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள விண்கல்லானது, பூமியை நெருங்க 4,473,807 கிலோ மீட்டர் வேகத்தில்  பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

37 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பாய்ந்து வரும் இந்த விண்கல்லானது, பூமியின் மீது மோதினால் ஒரு நாட்டையே அழித்துவிடக் கூடிய அளவுக்கு ஆபத்தானதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

பூமிக்கு மிக நெருக்கமாக வரும் இந்த விண்கல் பூமியின் மீது மோதினால், பருவநிலை மாற்றம், நிலநடுக்கம், சுனாமி போன்ற பாதிப்புகளும் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

1000 மீட்டர் அகலம் கொண்ட இந்த இராட்சத விண்கல் மோதினால் பூமிக்கு மிகப்பெரிய பாதிப்பு இருக்கும். கடந்த 1908ம் ஆண்டு சைபீரியாவின் துங்குஸ்காவில் விண்கல் விழுந்ததில் ஏற்பட்ட பாதிப்பைவிட அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சைபீரியாவில் விண்கல் மோதியதால், இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் அப்போது உணரப்பட்டது. விண்கல் மோதியபோது 80 மில்லியன் மரங்கள் அழிந்தது, சுமார் 5.0 அளவில் அதிர்வு காணப்பட்டது. துங்குஸ்காவில் விழுந்த விண்கல் 50 மீட்டர் ஆழத்துக்குப் பள்ளம் ஒன்றை ஏற்படுத்தியது.

தைவிட '2014 ஒய்.பி.35' விண்கல்லின் பாதிப்புகள் மிக அதிகளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பக்கிங்ஹாம்ஷைர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பில்நேப்பியர் டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில்,

“துங்குஸ்கா போன்ற நிகழ்வுகள் எல்லாம் சிறியதுதான்,இதன் பாதிப்பு உண்மையில் மிகவும் ஆபத்தானது. அப்போது நாம் இதுபோன்ற விண்கல்களை அடையாளம் கண்டுக் கொள்ளவில்லை. எனவே நாம் பாதிப்பை சம்மாளிக்க தயார்படுத்திக் கொள்ளாமல் இருந்தோம்.

ஆனால் ‘2014 ஒய்.பி.35' போன்ற விண்கற்கள் உலக அளவில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. ஆனால் நிகழ்வுகளை தடுக்கவும் வழி ஒன்று உள்ளது. விண்கற்கள் பூமியில் மோதுவது என்பது ஒரு அரிதான நிகழ்வுதான். இருப்பினும், விண்கற்களால் ஏற்படும் ஆபத்துகளை நாம் சாதாரணமாக நினைத்துவிட முடியாது.” என்றார்.

பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விண்கற்கள், மிகவும் அருகே வரும்நிலையில் எச்சரிக்கையை ஏற்படுத்துகிறது. ஆனால், பூமிக்கு அருகே விண்கற்கள் வருகிறது என்பது, பூமிக்கு பாதிப்பு ஏற்படுத்துவது என்று பொருள் ஆகாது, பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய போன்ற எச்சரிக்கை உள்ளது என்பதே பொருள் என்று நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விண்கற்கள் பூமியை நெருங்கி செல்வது என்பது வழக்கமான ஒன்றாகும்.

Category: செய்திகள் | Views: 209 | Added by: san | Rating: 0.0/0
Total comments: 0
avatar
Log In

Search

Calendar
«  March 2015  »
Su Mo Tu We Th Fr Sa
1234567
891011121314
15161718192021
22232425262728
293031

Entries archive

Site friends
  • uCoz Community
  • uCoz Manual
  • Video Tutorials
  • Official Template Store
  • Best uCoz Websites

  • Copyright MyCorp © 2026