மெட்ராஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்தி நடித்து வெளிவந்திருக்கும் படம் கொம்பன், கார்த்தி மற்றும் லட்சுமிமேனன் நடிப்பில் குட்டிபுலி படத்தின் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரின் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் பல எதிர்ப்புகளுக்கு பிறகு வெளிவந்திருக்கிறது.
செம்மநாடு, வெள்ளநாடு, அரசநாடு என்ற மூன்று ஜில்லாவில் பயணிக்கிறது கதை, அரச நாட்டை சேர்ந்த கார்த்தி ஊரில் எங்கு தப்பு நடந்தாலும் தட்டிக்கேட்கும் கிராமத்து இளைஞன் கொம்பனாக வலம்வருகிறார். பெண் கொடுப்பதற்கு முன் ஊர் முழுவதும் கார்த்தியை குறித்து விசாரிப்பதால் ராஜ்கிரனின் மேல் கோவப்படும் கார்த்தி தன் மாமனாரான ராஜ்கிரணை கார்த்தி மதிக்காமல் தொடர்ந்து அசிங்கப்படுத்தி வர, ஒரு கட்டத்தில் கைகலப்பு வரை செல்கிறது. பிறகு கார்த்தியின் பக்கத்து ஊர் தலைவருடன் வரும் முன்பகையால் லட்சுமிமேனனை வில்லன் ஆட்கள் அடிக்க வர மகளை காப்பாற்ற வில்லனை நடுரோட்டில் அடிக்க, உன்னையும் உன் மருமகனையும் கொன்றே தீருவேன் என்று கங்கனம் கட்டுகிறார்கள் வில்லன் குரூப். ராஜ்கிரனை ஜெயிலுக்கு அனுப்பி அங்கு வைத்தே கொள்ள முயற்சிகிறார்கள், தன் மாமனார் தன் மீது வைத்திருக்கும் அன்பை புரிந்துகொண்ட கார்த்தி மாமனாரை காப்பாற்ற தானும் சிறைக்கு சென்று வில்லன் ஆட்களிடமிருந்து மாமனாரை காப்பாற்றி வெளிக்கொண்டு வருகிறார் கார்த்தி. வெளிவந்த இருவரையும் தீர்த்து கட்ட ஒட்டுமொத்த சொத்தையும் பரிசாக அறிவிக்கிறார் வில்லன். கார்த்தி மாமனாரை காப்பாற்றினாரா, வில்லன் க்ரூப் என்ன ஆனது என்பது மீதி கதை.
கோவிலுக்கு ஜாதி ஜனத்தோட போகாதீங்க, ஜாதிய விட்டுட்டு ஜனத்தோடு போங்க போன்ற வசனம் கவனத்தை ஈர்க்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையில் கருப்பு நெறத்தழகி பாடல் ஆட்டம் போட வைக்கிறது.
மொத்தத்தில் கொம்பன் கிராமத்து மக்களை குறிவைத்து வந்திருக்கும் ஆவரேஜ் திரைப்படம்.