Thursday, 04.02.2026, 4:20 AM


Home
Sign Up
Log In
TAMILAN.DO.AM Welcome Guest | RSS  
Site menu

Section categories
செய்திகள் [9]
News
தொழிநுட்பம் [10]
Tec
மருத்துவம் [11]
Medical
சினிமா [6]
Cinema
வினோதங்கள் [11]
Dif

Our poll
Rate my site
Total of answers: 8

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

Block title

Home » 2015 » April » 5 » விஜய்க்கு சூப்பர்ஸ்டார் பட்டம் கொடுத்த தனுஷ்!
3:56 PM
விஜய்க்கு சூப்பர்ஸ்டார் பட்டம் கொடுத்த தனுஷ்!

விஜய்க்கு சூப்பர்ஸ்டார் பட்டம் கொடுத்த தனுஷ்!

 

c207

இளையதளபதி விஜய் வளர்ந்து வரும் இளம் நடிகர்களின் நண்பர்களாக இருந்து அவர்களுடைய வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக சிம்பு மற்றும் தனுஷுடன் விஜய் நெருங்கிய நட்புடன் சமீபகாலமாக இருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. சிம்புவுக்கு தல அஜீத் விருப்பமான நடிகராக இருந்தாலும் விஜய்யுடனும் நெருங்கிய நட்பு உண்டு.

இந்நிலையில் விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் சமீபத்தில் பேசிய நடிகர் தனுஷ், விஜய் தனக்கு நல்ல ஒரு நெருங்கிய நண்பர் என்றும் அதிகமான அடக்கமான மனிதர் என்றும் அனைவரிடமும் அன்பாகவும் பணிவாகவும் பழகக்கூடிய தன்மையை உடையவர் என்றும் கூறினார். மேலும் விஜய், தன்னை விட இளம் வயதினராக இருந்தாலும் ப்ரெண்ட்லியாக தோள் மேல் கை போடுவார் என்றும் அதே போல் தனது தோள் மீது கை போடவும் அனைவரையும் அவர் அனுமதிப்பார் என்றும் தனுஷ் கூறினார்.

தனக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள விஜய், யாருடைய பாணியையும் பின்பற்றாமல் அவரே தனக்கென ஒரு பாணியுடன் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் வலம் வரும் ஒரு நடிகர் விஜய் என்ரும் அவர் எனது நண்பர் என்று சொல்லிக்கொள்வதில் தனக்கு மிகப்பெரிய பெருமை என்றும் கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டாரின் மருமகனே விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று கூறிவிட்டதால் விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்தை நெருங்கி விட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகின்றன.

Category: சினிமா | Views: 216 | Added by: san | Rating: 0.0/0
Total comments: 0
avatar
Log In

Search

Calendar
«  April 2015  »
Su Mo Tu We Th Fr Sa
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930

Entries archive

Site friends
  • uCoz Community
  • uCoz Manual
  • Video Tutorials
  • Official Template Store
  • Best uCoz Websites

  • Copyright MyCorp © 2026